Also Watch
Read this
By: Web Team

அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாக, டிரம்பின் காசா போர் அமைதி திட்டத்திற்கு ஐநா வரவேற்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான காசா போர் அமைதி திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.