Also Watch
Read this

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் :
சிறைவாசம் அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 85 சதவீத பார்வைத் திறனை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு.
சிறையில் இம்ரான் கானின் வாழ்க்கைச் சுழல் குறித்து நேரடியாக சென்று பார்வையிட்டு, அறிக்கை சமர்ப்பிக்க அவரின் வழக்குரைஞரைக் கேட்டுக்கொண்டது. அதன்படி, சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த வழக்குரைஞர் தாக்கல் செய்த அறிக்கையில், இம்ரானுக்கு ரத்தக்கசிவு காரணமாக கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.
சிறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.