Also Watch
Read this
By: Manigandan Raja

ஐரோப்பா நாடுகளை உலுக்கும் கடும் வெப்ப அலை :
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலையால் தார்ச் சாலைகள் உருகியும், ரயில் மற்றும் டிராம் தண்டவாளங்கள் விரிவடைந்து வளைந்து நெளிந்து சேதமடைந்துள்ளன. லைப்சிக் ((Leipzig)) நகரில் தார் உருகி டிராம் தண்டவாளங்களில் புகுந்ததால் முழு டிராம் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மற்றொரு வீடியோவில் கடுமையான வெயிலில் வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் மக்கள் Omelette போட்டு சாப்பிட்டனர். நெதர்லாந்தில், கார்களில் உள்ள பிளாஸ்டிக் விரிவடைந்தும், தள்ளுவண்டி மற்றும் காலணிகள் வெயிலில் உருகும் வீடியோ வெளியாகி உள்ளது.
பிரான்ஸிலும் வெப்பம் தாங்காமல் சாலைகளில் உள்ள தார் உருகி காலணிகளில் ஓட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலையால், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் IS மற்றும் அல்-கொய்தா அமைப்புகள் கொடி :

ஃபிஃபா உலகக் கோப்பை உற்சாகத்திற்கு மத்தியில் வங்கதேசத்தில் IS மற்றும் அல்-கொய்தா அமைப்புகள் பயன்படுத்தும் 'கலிமா' கொடிகள் தென்பட்டுள்ளது, அண்டை நாடான இந்தியாவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
வீடுகளின் கூரைகளிலும் கொடிக்கம்பங்களிலும் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளின் கொடிகள் கட்டப்பட்டுள்ள அதேவேலையில் பயங்கரவாத அமைப்புகளின் கொடிகளும் கட்டப்பட்டுள்ளது பாதுகாப்பு வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்தில் வெளிநாட்டுத் தீவிரவாதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
AI-யால் தரச் சிக்கல்களை சமாளிக்க முடியவில்லை-ford :

(Coutesy : AFP)
AI-யால் தரச் சிக்கல்களை சமாளிக்க முடியாததால் 350 அனுபவமிக்க பொறியாளர்களை ford நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. மனிதர்களின் தனித்துவமான அனுபவம் மற்றும் முடிவெடுக்கும் திறனை AI-யால் ஈடுசெய்ய முடியாது என ஃபோர்டு நிறுவனம் உணர்ந்ததே இந்த அதிரடி முடிவுக்கு காரணமாக உள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் வாகன வன்பொருள் பொறியியல் பிரிவின் துணைத் தலைவரான சார்லஸ் பூன், தங்கள் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களின் அனுபவத்தை மதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.