news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யா தொழிற்பேட்டை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

ரஷ்யா தொழிற்பேட்டை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷ்யா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உக்ரைன் டிரோன்

டிரோன் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த ஆலை 

ரஷ்யாவின் தெற்கில் உள்ள தொழிற்பேட்டை மீது உக்ரேனின் ஆளில்லா விமான நடத்திய தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தெற்கு ரஷ்யாவில் உள்ள தொழிற்பேட்டை மீது தாக்குதல் நடத்திய உக்ரைன், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா நடத்தி வரும் கடுமையான தாக்குதல்களுக்கு தக்க பதிலடி என்று கூறியது.

இதற்கு பதிலடி கொடுத்ததாக கூறிய ரஷ்யா, 11 உக்ரைனிய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈரான் ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா 

வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை கெஷ்ம் ((Qeshm)) தீவின் ஆளுநர் உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க ஏவுகணைகள் கெஷ்ம் தீவில் உள்ள ராணுவத் தளங்களை குறிவைத்ததாக கூறினார். ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள 140-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின.

இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

பஹ்ரைனில் 2 ஆவது முறையாக எச்சரிக்கை சைரன்கள் 

அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் நிலையில், பஹ்ரைனில் திங்கட்கிழமை காலை 2 ஆவது முறையாக எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. பொதுமக்கள் பதற்றம் அடையாமல், அமைதி காக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையேயான நிலவி வரும் முரண்பாடுகளால் மீண்டும் போர் தொடங்கிவிடக் கூடும் என உலகத் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Link
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைநகர் பாங்காக்கில் உள்ள "பப்"பில் பயங்கர தீவிபத்து

0
8 mins agoshare
Thailand pub








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau