news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மெஸ்ஸி
tv

Also Watch

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மெஸ்ஸி

ஃப்ரீ கிக்கின்போது பின்னால் செல்லும்படி நடுவர் கூறினார் 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, போர்ச்சுக்கல் நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா - சுவிச்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் 1-க்கு 1 என சமநிலையில் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

இந்த சூழலில், ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தபோது, மெஸ்ஸியை பின்னால் செல்லுமாறு அம்பயர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னை அவமானப்படுத்த வேண்டாம் என நடுவரிடம் மெஸ்ஸி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மெக்கல்லம் விலகல் 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பிரெண்டன் மெக்கல்லம் விலகியுள்ளார். டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டதை தாம் மிகவும் ரசித்ததாகவும், அது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் மற்றும் கவுரவம் எனவும் கூறினார்.

மேலும், இதற்காக தாம் நன்றி உள்ளவனாக இருப்பதாகவும், இந்த பயணத்தில் ஆதரவளித்த வீரர்கள், பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். எனினும், ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர்ந்து செயல்பட உள்ளார்.

உலகின் நம்பர் 1 வீரர் இத்தாலியின் சின்னர் மீண்டும் சாம்பியன் 

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு கோப்பையுடன் 44 கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்கொண்டார். 3 மணி நேரம் 46 நிமிடங்கள் நீடித்த போட்டியில் சின்னர் 6-க்கு 7, 7-க்கு 6, 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Related Link
விம்பிள்டன்- செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்

விம்பிள்டன்- செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved