news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தானை சேர்ந்த தாய், மகன் கைது
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானை சேர்ந்த தாய், மகன் கைது

கர்நாடகா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கர்நாடகா

அடையாள அட்டை, ரேசன் கார்டு பறிமுதல் 

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, கர்நாடகாவில் வசித்து வந்த 2 பாகிஸ்தானியர்களை போலீஸார் கைது செய்தனர். சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் வசித்து வந்த பரா நாஸ், முகமது ஃபர்தீன் ஆகியோர் தாய், மகன் என்பது விசாரணையில் தெரிவந்ததை தொடர்ந்து, இருவரும் முறைகேடாக பெற்ற வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மழையால் சேதமடைந்த சாலைகள் மாநில பேரிடர் குழுவினரால் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

கேரளத்தையே உலுக்கிய வயநாடு மண் சரிவு விபத்து


கேரளத்தை உலுக்கிய வயநாடு மண் சரிவு சம்பவத்தில் மாயமான கடைசி நபரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. சுரங்கப்பாதை கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தாமல் அங்கேயே குன்றுகள் போல் கொட்டி வைத்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 7-ஆம் தேதி மழையின் காரணமாக அவை சரிந்து விபத்துக்குள்ளானது.

Related Link
நாடாளுமன்ற  கூட்டத்தொடரை முன்னிட்டு 19-ல் அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு 19-ல் அனைத்து கட்சி கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேசன் பொருட்கள் விநியோகித்த முதலமைச்சர் விஜய்

5
18 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau