news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரேசன் பொருட்கள் விநியோகித்த முதலமைச்சர் விஜய்
tv

Also Watch

tv

Read this

ரேசன் பொருட்கள் விநியோகித்த முதலமைச்சர் விஜய்

புதிய ரேஷன் கார்டும் விநியோகம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு விசிட் அடித்த முதலமைச்சர் விஜய் திடீரென சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சருக்கு பூக்கள் தூவி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
தமது சொந்த தொகுதியான பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். ரிப்பன் வெட்டி திறந்ததும், எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.

பெரம்பூர் மக்களுக்காக பிரத்யேக சேவை தளம்
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர் விஜய். தொகுதி மக்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சேவை தளத்தையும் தொடங்கி வைத்தார்.

புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை, பெரம்பூர் தொகுதியில், முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக பயனாளிகள் 50 பேருக்கு புதிய ரேசன் அட்டைகளை வழங்கினார்.

ரேசன் பொருட்கள் விநியோகித்த முதலமைச்சர்
பெரம்பூரில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்தார்.

Related Link
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குத்தகை உரிமத்தை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்

0
24 mins agoshare
தர்மபுரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau