Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் தூதரை அழைத்து ஓமன் கண்டனம்
ஓமன் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு தூதரை அழைத்து ஓமன் கண்டனம் தெரிவித்துள்ளது. தமது நிலப்பரப்பை ஈரான் குறிவைப்பதாக ஓமான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த பொறுப்பற்ற செயல்களால் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்த ஓமன், அரசின் இறையாண்மை, அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாமை ஆகிய விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
விபத்துக்கு காரணமாக அதிவேக படகின் கேப்டன் கைது

வியட்நாம் படகு விபத்துக்கு காரணமாக அதிவேக படகின் கேப்டனை வியட்நாம் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உயிரிழந்த நிலையில், விதிமுறைகளை மீறியதாக அதிவேக படகின் 57 வயது கேப்டனை ஆன் ஜியாங் மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, அங்குள்ள பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் அதிவேக படகு சவாரியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.