Also Watch
Read this
By: Manigandan Raja

தீவிபத்தில் சிக்கி 27 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள "பப்"பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விடுமுறை நாளையொட்டி, பப்பில் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனால், உள்ளே இருந்த பலரும் அலறியடித்துக் கொண்டு தீப்பிளம்புகளை கிழித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். எனினும், தீவிபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம், தீவிபத்துக்கு பிறகு பலரும் மாயமானதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த சில தினங்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழை

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2.67 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், பல்வேறு பகுதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மாகாணத்தின் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வங்கதேச அரசு செய்வதறியாது திகைத்து போய் உள்ளது.