அமெரிக்க அரசு கொடுக்கும் அழுத்தம் : இலங்கை கடற்பகுதியில் தாக்கி அழித்த ஈரானின் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களையோ அல்லது இப்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டாவது கப்பலில் உள்ளவர்களையோ, ஈரானுக்கு திருப்பி அனுப்ப கூடாது என இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஈரானின் IRIS Dena என்ற போர் கப்பலை இலங்கையின் தெற்கு துறைமுக நகரமான காலியின் கடலில் வைத்து அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீர ர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஈரானின் IRIS Booshehr என்ற இரண்டாவது கடற்படை கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த வீர ர்கள் மீட்கப்பட்டு பல இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப கூடாது என்ற அமெரிக்காவின் அழுத்த திற்கு பதிலளித்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, இந்த விவகாரத்தில் தமது அரசு மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். Related Link அமெரிக்காவின் ரகசிய மாஸ்டர் பிளான் பற்றி டிரம்ப் தகவல்