Also Watch
Read this
By: Web Team

ஈரானுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அமெரிக்க போர் கப்பல், ஈரானின் எச்சரிக்கையையடுத்து அங்கிருந்து பின்வாங்கியது.
ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு ((Fitz gerald)) அத்துமீறி நுழைய முயன்றபோது ஈரானின் ராணுவ ஹெலிகாப்டர் சென்று எச்சரிக்கை விடுத்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அப்பகுதியை விட்டு செல்லவில்லை என்றால் ஹெலிகாப்டர் இலக்காக எடுத்து கொள்ளப்படும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளதாக ஈரான் பதிலளிக்கவே அமெரிக்க கப்பல் பின்வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தவறான தகவல்கள் என அமெரிக்கா மறுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved