Also Watch
Read this
By: Web Team

தென்மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் தனுஷ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 3-ம் கட்டமாக மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், அவர்களது குடும்பத்தினர் என சுமார் 2500 பேரை, ராமநாதபுரத்தில் ஒரு தனியார் ஓட்டலில் சந்தித்தார்.
அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி விருந்து கொடுத்த தனுஷ், பெண்களுக்கு பட்டுப்புடவைகளும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்குகளும் வழங்கி புகைப்படம் எடுத்து மகிழ்வித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved