Also Watch
Read this
By: Web Team

நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என அவர் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால் தற்போது 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். திருமணமான பின்பு பெரிதாக படம் நடிக்காமல் இருந்த அவர், தற்போது குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது.