Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழகத்தில் பனங்கள் தடை செய்யப்பட்ட பானமாக உள்ளது இதனை இறக்கவும் விற்பனை செய்யவும் பனை விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கான அனுமதியை அரசு தற்போது வரை வழங்கவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் முருகன் இவர் மூல கரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக தற்போது பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உளவு பிரிவு காவலராக அதே பகுதியில் பணியாற்றியுள்ளார் இவர் நண்பர்களோடு இணைந்து பனை கள் அருந்துவது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் தனியாக 5 லிட்டர் கேனில் இருக்கும் கள்ளை குடிப்பது போன்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன
குமாருக்கு தகவல் தெரிந்த நிலையில் துறை ரீதியான விசாரணை நடத்தவும் காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் விவசாயிகள் பனங்கள் இறக்குவதாக கூறி அவவரை உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய தோடு இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே காவலர் ஒருவரே தடை செய்யப்பட்ட பொருளை நண்பர்களோடு இணைந்து அருந்துவது போன்ற காட்சி வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved