news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஓய்வுப் பெற்ற ரயில்வே ஊழியரின் வீட்டில் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

ஓய்வுப் பெற்ற ரயில்வே ஊழியரின் வீட்டில் கொள்ளை

கந்தன்நகர், ஈரோடு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வீட்டில் கொள்ளை

ஈரோடு ரங்கம்பாளையம் கந்தன் நகர் பகுதியில் சாமியப்பன் லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சாமியப்பன் தனது மகள் சுந்தரியுடன் கந்தன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இன்று பிற்பகலில் மறைந்த இவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இரண்டு முப்பது மணி அளவில் மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் உள்ளே இருந்த பீரோ உள்ளிட்ட அனைத்தும் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சுமார் 55 சவரன் தங்க நகையும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20000 ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக தடயவியல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மோப்பநாய் வால்டர் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அழைத்துவரப்பட்ட தடயங்கள் ஏதேனும் கிடைக்கப்பெறுகிறதா என போலீசார் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் மிகுந்த குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் உலா வந்த யானை கூட்டம்

லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் உலா வந்த யானை கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
8 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved