Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை அடுத்த வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராம். இவரது மனைவி சாரதா (56). இவர் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
அங்கு 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்த சாரதா, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது
நெல்லை - சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் மேசியாபுரம் விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில் நாகர்கோவிலை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாரதா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாரதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.
இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved