Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக முழுவதும் உள்ள கோவில்கள் பேருந்து நிறுத்தங்கள் பள்ளிகளுக்கு அருகே உள்ள 717 அரசு மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிடப்பட்டது ஆனால் தனியாரிடம் உள்ள மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மதுபான கடைகள் இன்னும் செயல்பட்டு வரும் நிலையில் இன்று மாலை ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.
திடீரென ஆனைமலை டாப்ஸ்லிப் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் எதற்காக சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று கேட்டதற்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள FL2 தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் நடந்து செல்லவே அச்சுறுத்தலாக உள்ளது ஆகையால் இந்த கடையை அகற்ற வேண்டும் என கூறினர் இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நாட்களில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
ஆனால் பொதுமக்கள் கூறுகையில் இன்னும் மூன்று நாட்களில் கடையை மூடாவிட்டால் நாங்கள் ஆனைமலை காவல் நிலையம் சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved