Also Watch
Read this
By: Manigandan Raja

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து கடந்த நான்காம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்த உடனே பாட புத்தகம் மற்றும் சீருடை உடனடியாக வழங்கப்படும் என கல்வித்துறை தெரிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் இப்பொழுது பத்து நாட்களுக்கு மேலாக ஆகியும் தற்போது வரை புத்தகம் மற்றும் சீருடை வழங்காமல் இருந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை ஒட்டி புதுச்சேரி ஊசுடு தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார் சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதலமைச்சரை சந்தித்து உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை புத்தகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் தற்போது துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்...அதிகப்படியான ஐஏஎஸ் அதிகாரிகளால் புதுச்சேரி வீணாகிவிட்டது,ஜாலியாக இருக்கத்தான் புதுச்சேரிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் வருகிறார்கள்,புதுச்சேரி நிர்வாகம் வேறு , தமிழக நிர்வாகம் வேறு,அங்கு முதலமைச்சர் சொன்னால் அதிகாரிகள் உடனே செய்வார்கள், இங்கே துணைநிலை ஆளுநர் தடை செய்வார்கள்.மனு அளிக்க வந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்சரவணக்குமாரிடம் ஆதங்கப்பட்ட முதலமைச்சர் ரங்கசாமி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved