Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் ( 36). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு தொட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஞானசேகரிடம் விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு ரூ. ஐந்தாயிரம் ஞானசேகர் லஞ்சமாக கேட்டுள்ளார்.
பின்னர் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரூ 4,000 ரசாயன பொடி தடவிய பணத்துடன் இன்று தொட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு கோவிந்தராஜன் வந்தார்.

அங்கிருந்து ஞானசேகரிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார்
ஞானசேகரை கையும் களமாக பிடித்து கைது செய்தனர்.