Also Watch
Read this
By: Manigandan Raja

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி பொம்மதா சம்பட்டி கிராமத்தில் அண்ணாமலை (வயது35) என்பவர் இறந்ததை அடுத்து அடக்கம் செய்வதற்காக ஏற்கனவே இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே இறந்தவரின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்லும் பாதை தனி நபர் அது எனது பட்டா நிலம் என தடுத்து நிறுத்துவதால்.
சடலத்தை இடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளதால் இப்பகுதி பொது மக்கள் அண்ணாமலையின் உடலை பொம்மதாசம்பட்டி கிராமத்தின் நடுவில் உள்ள சாலையில் உடலை புதைக்க குழி தோண்டி அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனால் கிராம பகுதியில் பெரும் பரபரப்பு தகவல் இருந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் ராஜலட்சுமி, சிங்காரப்பேட்டை
இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் பொதுமக்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது; இந்தப் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியாக இரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தி பல மாதங்கள் ஆகியும், அந்த இடத்தை வருவாய்த் துறையினர் நிலத்தை அளவீடு செய்து சுடுகாட்டிற்காக ஒப்படைக்காததால் அந்த இடத்தில் அடக்கம் செய்ய முடியவில்லை.
மேலும் அந்த இடத்திற்கு செல்வதற்கு சரியான வழி பாதையும் இல்லை. எனவே அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்து அதற்கு வழி ஏற்படுத்தி செய்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved