Also Watch
Read this
By: Manigandan Raja

ஓசூர் மத்தம் அக்ரஹாரம் ஏவிஎஸ் ரெசிடென்சி குடியிருப்புக்குள் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நான்கு பேர் சுவர் ஏறி குதித்து அங்குள்ள தெருக்களில் சர்வ சாதாரணமாக சுற்றி வந்துள்ளனர் 4 பேரும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவாக சுற்றித்திரிந்தது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்றது அந்த பகுதியில் வீடுகளில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் நான்கு பேரும் அங்குள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டை உடைத்து கதவையும் உடைத்து வீட்டிற்குள் சென்று திருடுவதற்கு முயற்சி மேற்கொண்டு உள்ளனர் வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் இல்லாததால் அவர்கள் திரும்பி வந்துள்ளனர் அதேபோல நள்ளிரவில் அங்குள்ள மற்றொரு வீட்டுக்குள்ளும் சென்று திருடுவதற்கு முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

திருடர்கள் நான்கு பேரும் தெருக்கள் வழியாக சென்றபோது வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் அவர்களை பார்த்து நீண்ட நேரம் குறைத்ததால் அப்பகுதியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் காலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது முகமூடி கொள்ளையர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து சர்வ சாதாரணமாக சென்றது அப்பகுதியினருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சங்கம் மூலம் ஓசூர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதன் பேரில் இன்று போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்ற வீட்டில் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர் இந்த சம்பவம் அந்த குடியிருப்பு வாசிகளை
கடும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.