Also Watch
Read this
By: Web Team

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் தொடர்பான மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமைந்த பிறகு, முதன்முறையாக பிரதமரை இபிஎஸ் சந்தித்தார்.
அப்போது, விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் விவசாயிகளுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் விதமாக ராணுவ வழித்தடம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை இபிஎஸ் வழங்கினார். அதனை பெற்று கொண்டு பிரதமர் மோடி, கோரிக்கைகளை பரிசீலித்து ஆவணம் செய்வதாக உறுதி அளித்தார்.
முன்னதாக பிரதமர் மோடியை இபிஎஸ் வரவேற்றபோது முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் மோடியை வரவேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved