Also Watch
Read this
தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையுமாறு காவல்துறையினர் தன்னை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தென் மாவட்டத்தில் ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரை முதலமைச்சர் தன் காலில் விழுந்தாலும் தவெகவில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி தந்துள்ளார்.

திமுக சொல்லாமல்...
தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது;

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக தலைமை சொல்லாமல் செந்தில் பாலாஜி செய்திருக்க மாட்டார். ஆளுநரிடம் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால், தேர்தலை சந்திக்க எங்கள் தலைவர் 100% தயாராக இருந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏன்?
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் பேசியதை பார்த்திருப்பீர்கள். முதல்வரை தனிப்பட்ட முறையில் எவ்வளவு கேவலமாக பேசினார். அவருடைய முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டு காவல்துறை கைது செய்தது வழக்கமாக நடப்பது தான். இது சாதாரண நடைமுறை. ஆனால் அவர் பேசியதற்கு வழக்கு போடாமல் இருக்க முடியாது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் திமுகவினர் இதே போல் தான் பேசுகிறார்கள்.

காலில் விழுந்தாலும்...
அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்து விட்டு சேர சொன்னதாக சொல்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடியையும், கேவலமான நபரையும் தவம் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். தென் தமிழகத்தில் அனைத்து விரோத ரவுடித்தனமும் செய்பவர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர். 20 ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு
ரவுடித்தனம் செய்தவர். அவர் தவமிருந்து முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved