news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேற லெவல் சாதனை!!!
tv

Also Watch

வேற லெவல் சாதனை!!!

திண்டுக்கல்

38

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dgl 1

ஒட்டன்சத்திரம் அருகே 3,825 அடி உயரமான மலையை 867-வது நாளாக 2 மணி நேரம் 30 நிமிடத்தில் நான்கு முறை ஏறி இறங்கி இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் உள்ள கொண்டரங்கி மலை 3,825 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையை திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(26) என்ற இளைஞர் 867 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு நான்கு முறை ஏறி இறங்கி வருகிறார்.

உலக சாதனை படைத்த கோபாலகிருஷ்ணன்
இந்த நிலையில் கிரகாம்பெல் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகம் சார்பில் உலக சாதனையாளர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் கோபாலகிருஷ்ணன் 2 மணி நேரம் 30 நிமிடத்தில் நான்கு முறை மலையை ஏறி இறங்கி சாதனை படைத்தார். அவருக்கு கிரகாம்பெல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகம் சார்பில் உலக சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தி உள்ளனர்.

ஒலிம்பிக்கிற்கு செல்ல வேண்டும்
உலக சாதனை படைத்த இளைஞர் கூறுகையில் இந்த உலக சாதனை செய்தி தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு சென்றடைய வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்காகவும், இந்தியாவிற்காகவும் விளையாண்டு ஒலிம்பிக்கிற்கு செல்ல வேண்டும் என்றும் இதற்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கிரகாம்பெல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தக CEO ஸ்ரீதர், வீரத்தமிழன் பவுண்டேஷன் நிறுவனர் கனகராஜ், TEAM MFG நிறுவனர் தனுஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Link
50வது புதிய காவல் ஆணையாளர்

50வது புதிய காவல் ஆணையாளர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved