news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கும்பம் to மீனம் - சனிப்பெயர்ச்சி
tv

Also Watch

tv

Read this

கும்பம் to மீனம் - சனிப்பெயர்ச்சி

திருநள்ளாறு

101

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா, கோலாகலமாக நடைபெற்றது. கும்பத்திலிருந்து மீன ராசிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு, திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

திருநள்ளாறு... வழிபாடு...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பெயர்ச்சி அடைந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருநள்ளாறு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில், பக்தர்களுக்கு அனுகிரக மூர்த்தியாக அருள் பாலித்து வரும் சனீஸ்வர பகவான் ஆலயத்தில், இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில், இன்று மார்ச் 6ஆம் தேதி, காலை 08.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப் பெயர்ச்சி அடைந்தார்.

குவிந்த பக்தர்கள்
இதனை அடுத்து சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வைர அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைப்போல் சனீஸ்வர பகவான் உற்சவர் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை அடுத்து சனி பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு, அடிப்படை வசதிகள்
சனி பெயர்ச்சி முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால், திருநள்ளாறு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று பக்தர்களுக்கு தேவையான பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Related Link
12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்

12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

10
12 hrs 34 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau