news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்
tv

Also Watch

tv

Read this

12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்

தஞ்சாவூர்

51

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj 2-1-Picsart-AiImageEnhancer

12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் இன்று காலை முதல் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அத்திவரதர் தரிசனத்திற்காக அதிகாலை கும்பகோணத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களுக்கு பெருமாள் தெரியவில்லை
300 ரூபாய் கட்டணம் செலுத்தி அத்தி வரதருக்கு தைலக்காப்பு சாற்றுவதால் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு பெருமாள் தெரியவில்லை இதனால் பொது தரிசனத்தில் வந்த பக்தர்கள் காவல்துறையினர் மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் கடும் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பழமையான ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் சிலை உள்ளது. இந்த சிலை பாதாள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி கொடுக்கும் அத்திவரதர்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அத்திவரதர் 1915 ஆம் ஆண்டு காட்சி கொடுத்த பின்பு பாதாள அறையில் வைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் அதன் பிறகு 98 ஆண்டு காலம் வெளியே எடுக்காமல் இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு வெளிய எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் வைக்கப்பட்ட அத்திவரதர், இன்று மார்ச் 01 ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
இந்த அத்தி வரதரை தரிசனம் செய்ய கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை தவிர பல வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் நாள்தோறும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்தனர். நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நிர்வாகம் அத்தி வரதருக்கு தைலக்காப்பு சாற்ற 300 ரூபாயும் புஷ்ப சேவைக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயத்து வசூலித்து வருகிறது.

பொதுதரிசனம் செய்யும் பக்தர்கள் வாக்குவாதம்
தைலக்காப்பு சாற்ற டிக்கெட் பெற்றவர்கள் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றுவதால் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு பெருமாள் தெரியவில்லை, இதனால் பொதுதரிசனத்தில் வந்த பக்தர்கள் காவல்துறையினர் மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Link
மாசி மகத்தேர் திருவிழா

மாசி மகத்தேர் திருவிழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வால்பாறையில் சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை

0
6 mins agoshare
கொட்டித் தீர்த்த மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved