Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மூன்றாவது
வெள்ளி கிழமை தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தர்கள் பால்காவடி அழகு காவடி எடுத்து முக்கிய வீதிய வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும்
கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பச்சைக்காளி பவளக்காளி திருவீதி உலாவும், தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.