Also Watch
Read this
By: Manigandan Raja

மருத்துவமனையில் லஞ்சம் :
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் இருவதற்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் இங்கு வந்து
சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் செவிலியர்கள் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை, தாமதமாகவே வருகிறார்கள். நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையை கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் காட்டுவதற்கு மிரட்டி பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினராஜ் என்ற வாலிபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது பெயர் ரத்தினராஜ் என்றும் தனது மனைவி பெயர் கௌசல்யா என்றும் கடந்த பத்தாம் தேதி மனைவியை பிரசவத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாகவும் குழந்தை பிறந்ததும் அதை என்னிடம் காட்டுவதற்கு 500 ரூபாய் செவிலிய உதவியாளர் லஞ்சம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.
பணம் கொடுத்த பிறகு குழந்தையை காட்டியதாகவும் தெரிகிறது மேலும் மனைவியை வார்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் பாதியில் நிறுத்தி 600 ரூபாய் தந்தால் மட்டுமே மேற்கொண்டு
ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல முடியும் எனக் கூறி கட்டாய லஞ்சம் பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாளொன்றுக்கு இருவருக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பிறக்கும் நிலையில் எவ்வளவு ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால், அது தவறுதான் தொடர்புடைய நபர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என மருத்துவமனை நிர்வாகம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற லஞ்சம் பெரும் நபர்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved