Also Watch
Read this
By: Manigandan Raja

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து வேலூர் செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பாலாற்றங்கரை பகுதியில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது மூன்று எருமை மாடுகள் சாலையை கடக்கும் போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி 25 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் எதிர்பாராத விதமாக மாடுகளின் மீது வேகமாக மோதி சாலையில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் சென்டர் மீடியாவை உடைத்துக் கொண்டு பக்கவாட்டில் சாய்ந்து நின்றதாக தெரிகிறது.

இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் சிறுது காயத்துடன் உயிர் தப்பியதோடு இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு போலீசார் சாலையில் உயிரிழந்து கிடந்த எருமை மாடுகள் மற்றும் சென்ட்ரல் மீடியாவில் சாய்ந்து கிடந்த வாகனத்தை அப்புறப்படுத்தியதோடு.
இச்சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் நடந்த இந்த விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்தபடி சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved