news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோயிலில் உண்டியல், ஆபரணங்கள் திருட்டு, சிசிடிவி அதிர்ச்சி காட்சி
tv

Also Watch

tv

Read this

கோயிலில் உண்டியல், ஆபரணங்கள் திருட்டு, சிசிடிவி அதிர்ச்சி காட்சி

கரூர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thift

விநாயகர் கோயிலில், நள்ளிரவில், உண்டியலை திருடிய மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வைகநல்லூர் அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபம் அருகே விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 20ஆம் தேதி நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், கோயிலின் உண்டியல் மற்றும் சாமிக்கு அலங்கரித்து இருந்த ஆபரணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தற்போது சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குளித்தலை நகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவுகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடுவது அதிகரித்துள்ளது. குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமங்கலத்தில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் திடீரென பழுது

0
5 mins agoshare
ட்ரான்ஸ்பார்மர் திடீரென பழுது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved