Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சரவணனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் S.கூடலூரை சேர்ந்த வள்ளி என்பவரது மகள் சந்தியா என்பவர் கடந்த 23.06.2021 அன்று திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு ஹர்ஷியா A/4 என்ற பெண் குழந்தை உள்ளதாகவும், தனது மருமகள் சந்தியா என்பவர் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருக்கும் தனது மகனுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்றும்,கடந்த 25 நாட்களுக்கு முன்பு இதேபோல் பிரச்சினை ஏற்பட்டு சந்தியா மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் சமாதானம் செய்ததாகவும், ஆனால் தனது மருமகள் சமாதானமாகாமல் அவரது சித்தி வீடான அண்ணனூருக்கு சென்று விட்டதாகவும்,அப்போது முதல் குழந்தை தனது மகனின் பராமரிப்பில் இருப்பதாகவும், இந்நிலையில்
இன்று மதியம் தானும் குழந்தையும் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்ப வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது 3 திருநங்கைகளுடன் காரில் வந்த தனது மருமகள் சந்தியா தன்னை கீழே தள்ளிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு காரில் சென்று விட்டதாக தெரியவருகிறது சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved