Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் பிற்பகல் 7:00 மணிக்கு மின் கோளாறால் வெடித்தது இதனால் மின் தடை ஏற்பட்டது.மின்தடையால் உசிலம்பட்டி ரோடு தண்டன் தெரு கொடிமர தெரு காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆனந்தன் தெரு ராஜாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்
பாதிக்கப்பட்டுள்ளது.
மின்தடை காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே கடைகளை அடைத்துச் சென்றனர்.இந்த நிலையில் மின்தடை தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது மின் டிரான்ஸ்பார்மர் பழுது அடைந்ததால் திருமங்கலம் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் கையிருப்பு இல்லாததால் மாற்று வழியில் மின்தடையை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மின்தடை தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சந்திரசேகர் மின் டிரான்ஸ்பார்மரை குறிப்பிட்ட காலத்தில் பழுது பார்க்க வேண்டும் ஆனால் அலட்சியமாக இருந்து இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக திமுக ஆதரவு அதிகாரிகள் வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துவதாகவும் இது போன்ற அதிகாரிகளை தமிழக அரசு கண்டறிந்து அவர்களை இடமாற்றம் செய்ய
வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.