Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் புகழ்வாய்ந்த பாப்பாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வேண்டினால் பாப்பாத்தி அம்மன் நிறைவேற்றுவதாக ஐதீகம், அதன்
காரணமாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பொதுமக்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறவும் அதேபோல வேண்டியது நிறைவேறினாலும் அதற்காக நேர்த்திக்கடனாக பொதுமக்கள் பித்தளை மணிகளை அந்தக் கோவிலில் கட்டுவது வழக்கம்.
இந்த நிலையில் அங்கு கட்டப்பட்டிருந்த மணிகள் ஒவ்வொரு நாளாக குறைய தொடங்கியுள்ளது. இதனை அறிந்த பூசாரி இதனை கண்டுபிடிக்க கோவிலின் அருகாமையில் இருந்து கண்காணித்தார் அப்போது ஆண்டியப்பனூர் தமிழக வெற்றிக்கழக கிளை நிர்வாகி குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சுத்தியல் மற்றும் கட்டிங் பிளேடு வைத்துக்கொண்டு பித்தளை மணியை கழட்டிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் ஊர் மக்களுக்கு தெரிவித்து அவரை பிடித்து சரா மாறி கேள்வி எழுப்பினர் மேலும் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் இன்று பரவ செய்துள்ளனர்.
மேலும் திருட வந்தது ஊர்ஜிதம் படுத்தப்பட்டால் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.