news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்தியதாக புகார்
tv

Also Watch

tv

Read this

ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்தியதாக புகார்

கொடைக்கானல், திண்டுக்கல்

42

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Ambulance

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானல் மற்றும் மலை கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் அவசர காலகட்டங்களில் மருத்துவமனையில் உரிய நேரத்திற்கு செல்ல ஏதுவாக பெரும் உதவியாக
இருந்து வருகிறது.

இந்த நிலையில் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மர பீரோவை நகர் பகுதியில் இருந்து எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மக்களின் பயன்பாட்டிற்கு தமிழக அரசு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இது போன்ற சரக்கு வாகனமாக மாற்றி ஏற்றி சென்றது குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அவசர காலகட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் பர்னிச்சர் ஏற்றி சென்ற ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகள் பெறும் அசம்பாவிததில் முடிவதால் அதற்காக ஒதுக்கப்பட்ட வாகனத்தில் இது போன்ற ஒரு செய்கையால் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது போன்று நிகழ்வுகளை அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
சாலையை கடக்க முயன்ற முதியவர் ஆம்புலன்ஸ் மோதி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற முதியவர் ஆம்புலன்ஸ் மோதி உயிரிழப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

8
11 hrs 49 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau