news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையின் நடுவே நின்று பேசியதை கண்டித்த திமுக நிர்வாகி
tv

Also Watch

tv

Read this

சாலையின் நடுவே நின்று பேசியதை கண்டித்த திமுக நிர்வாகி

திருப்பூர்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வடமாநில தொழிலாளர்கள்

நடுவே நின்று பேசியதை கண்டித்த திமுக நிர்வாகி : 

திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இதில் திருப்பூர் ஒன்றாவது வார்டு ESI மருத்துவமனை பின்புறம் உள்ள இந்திரா நகர் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் சிலர் இன்று இந்திரா நகர் பகுதியில் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது அந்த வழியாக வந்த வேலம்பாளையம் பகுதி கழக நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெகதீஷ் என்பவர் சாலையோரம் நின்று பேசுமாறு கூறியுள்ளார் மேலும் அவர்களை அநாகரிகமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கேட்ட தொழிலாளர்கள் தங்களுக்கும் தமிழ் தெரியும் என் திட்டுகிறீர்கள் என கேட்டதாகவும் இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஜெகதீஷ் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அருகில் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்று தங்கள் சக தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே வந்து ஜெகதீசன் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் கொண்டு ஜெகதீஷ் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் தலையில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஜெகதீசுக்கு உதவ முன் வந்ததை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இரண்டு பேரை மட்டும் பிடித்த பொதுமக்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரிடம் இருவரை ஒப்படைத்தனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள
போலீசார் மேலும் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஜெகதீஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
வால்பாறையில் சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை

வால்பாறையில் சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
20 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau