news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டுமானத்திற்கு இது உதவுமா ? எங்க காசெல்லாம் வேஸ்ட்...
tv

Also Watch

கட்டுமானத்திற்கு இது உதவுமா ? எங்க காசெல்லாம் வேஸ்ட்...

தஞ்சை

80

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj 2(4)

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெளியே மாதக்கணக்கில், துருப்பிடித்த நிலையில் போடப்பட்ட டன் கணக்கான கட்டுமான கம்பிகள்; சம்பந்தப்பட்ட குடோனில் வைக்கப்படாமல், மழையிலும் வெயிலிலும் கிடந்து வீணாகும் கம்பிகளை மாவட்ட நிர்வாகம் மீண்டும் கட்டுமான பணிக்கு பயன்படுத்துமா என்ற அச்சத்தில் பொதுமக்கள்

மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும்...
பாபநாசத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலகம் வெளியே குடோனில் வைக்க வேண்டிய டன் கணக்கான கட்டுமான கம்பிகள் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டு மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் தூசு படிந்து துருப்பிடித்தும் காணப்படுகிறது. இதனால் அரசு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கட்டுமானத்திற்கு பயன்படும் கம்பிகள் தரமானதாக இருக்குமா, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய சூழல் அமையுமா, அல்லது அனைத்து கம்பிகளும் வீணாகுமா என்ற அச்சத்திலே பொதுமக்கள் அதனை பார்த்து கொண்டே கேள்வியெழுப்பியபடி செல்கின்றனர்.

குவிந்து கிடக்கும் டன் கணக்கான கம்பிகள்
மேலும் குடோனில் வைக்கக்கூடிய டன் கணக்கான கம்பிகள் எதற்காக அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கிறது எனவும், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடையூறாகவும் இருந்து வரும் நிலையில், தங்களது வரிப்பணம் எல்லாம் வீணாகுவதாக குமுறும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வெளியே குவிந்து கிடக்கும் டன் கணக்கான கம்பிகளை குடோனுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
நீங்கதான் இனி  எல்லாமே...

நீங்கதான் இனி எல்லாமே...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved