Also Watch
Read this
By: Web Team

நவராத்திரி விழா நிறைவு பெற்றதையொட்டி, ஜெயின் சமூகத்தினர், கடலூர் வெள்ளி கடற்கரையில் துர்கா சிலையை கரைத்து உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர், கடலூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை (துர்கா பூஜை) சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழாவை கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையத்தில் உள்ள மண்டபத்தில் தொடங்கினர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளை துர்காதேவிக்கு சிறப்பு பூஜை செய்தும், பஜனை பாடியும், தாண்டியா நடனம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், நவராத்திரி நிறைவு நாளான இன்று துர்கா, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட துர்கை அம்மன் சிலையை வாகனம் மூலம் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்து, கடற்கரையில் துர்கைக்கு தீர்த்தவாரி நடத்தினர். அப்போது, ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் பல வண்ண பொடிகளை ஒருவர் மீது
ஒருவர் பூசிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடல்களை பாடியும், நடனம் ஆடியும் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து துர்க்கை அம்மன் சிலையை ஒரு படகில் வைத்து, கடலுக்குள் கரைத்து விட்டு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved