Also Watch
Read this
By: Web Team

தவெக தலைவர் விஜய்க்கு, மாலை அணிவித்த ஜேசிபி இயந்திர உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் தேதி, தவெக தலைவர் விஜய், திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்போது, அவர் வருகிற சாலை முழுவதும் தவெக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வருகை தந்தபோது, திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனி பகுதியில் தவெக திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன், ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக ஆள் உயர மாலையை விஜய்க்கு அணிவித்தார்.

இந்நிலையில், பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ், மாவட்ட செயலாளர் மதன், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் தவெக உறுப்பினர்கள் மனோ, அன்பு உள்ளிட்ட நான்கு பேர் மீது திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved