Also Watch
Read this
By: Manigandan Raja

அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம் :
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் 156- வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
இதற்காக இன்று மாலை புனித ஜெபமாலை மாதா தேர் வீதி உலா புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக தேர் வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது பின்னர் புனித பாடல்களை பாடி புதுச்சேரி திரு இருதய ஆண்டவர் பசிலிக்கா திருத்தலம் அதிபர் பங்குத்தந்தை பேரருட்திரு பிச்சமுத்து கொடியேற்று வைத்தார்.

ட்ரோன் கேமரா மூலம் கலர் பேப்பர் தூவி வரவேற்றனர் இதனை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது முக்கிய நிகழ்வாக 30-05-2026 தேதி வெள்ளிக்கிழமை இரவு தேர் பவானி நடைபெற உள்ளது இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved