Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 09:52 AM
By: Manigandan Raja

கே.பி. முனுசாமி கேள்வி :
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு வரவுள்ள 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது கூட்டத்தில் பேசிய கேபி முனுசாமி, நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடினார். இப்போது ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வருவதாக கூறுகிறார் அவர், வெளிநாட்டில் காரை வாங்கி வரி கட்டுவதில் ஏமாற்றம் செய்து அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் அதற்கு அவர் நீதிமன்றத்தில் அப்பில் போகிறார்.
இவர் நாட்டு மக்களை காப்பாற்றுபவரா? நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சாதாரண விவசாயி அதிமுகவின் கிளை செயலாளராக இருந்து போராடி ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்கி விசுவாசத்தைக் காட்டி தலைவர்களிடம் அன்பை பெற்று கொள்கை பரப்பு செயலாளராக, அமைச்சராக உருவாகி உயர்ந்த இடத்திற்கு வந்தார்.
நாம் எல்லோரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து உள்ளோம், அவர் திடீரென பொதுச்செயலாளராக வரவில்லை இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் கிட்டத்தட்ட 65
ஆண்டு காலம் போராடி உள்ளார்.
ஆனால் இந்த நடிகரோ சினிமாவில் ஷோ காட்டி விட்டு தானே ஒரு கட்சி ஆரம்பித்து உள்ளார். தற்போது அவரது இரண்டாம் கட்ட தலைவராக உள்ளவர்களில் ஒருவர் நம்மிடம் இருந்தவர் எல்லாத்தையும் அனுபவித்துவிட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காலம் வரை கட்சியிலிருந்து பொருளாதாரத்தில் உச்சம் பெற்று விட்டு.
அதிகாரம் அனைத்தையும் அனுபவித்துவிட்டு மந்திரியாகவும் மாவட்ட செயலாளராகவும் எம்எல்ஏ ஆக பதவியும் பிடித்து அங்கே சென்றுள்ளார். அங்கே கொள்கை கோட்பாட்டுக்காக செல்லவில்லை பதவிக்காக சென்றுள்ளார்.
அந்தக் கட்சியில் லாட்டரி டிக்கெட் விற்கும் கூட்டம் உள்ளது. லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தால் பணம் கொடுப்பதில்லை பல மாநிலங்களில் இந்த தொழிலை நடத்தி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கையில் உள்ளது.
அவர் பல கட்சிகளில் இருந்தார் திருமாவளவன் கட்சியிலும் இருந்தார் அவரை துரத்தி விட்டனர். திமுகவிலும் துரத்தி விட்டனர். நமது கட்சிக்கும் அவர் வர பார்த்தார். நாமும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது நடிகர் கட்சிக்கு அவர் சென்றுள்ளார். காசு கொடுத்து பதவியை வாங்குபவர்கள் அந்த கட்சிக்கு செல்கிறார்கள். உழைத்து தியாகம் செய்து அந்த தியாகத்தின் அடிப்படையில் வாய்ப்புகளை பெற்று பதவி பொருப்புகளை எடுப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த மூன்றாவது கூட்டம் தலை எடுக்கக் கூடாது சமூகத்தில் எந்த கஷ்ட நஷ்டங்களுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல். ஏதோ ஒரு மாய தோட்டத்தை வைத்து கொண்டு உயர்ந்த பதவியான முதலமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள் அவர்களை எந்த சூழ்நிலையிலும் இடம் கொடுக்கக் கூடாது.
அதேபோல ஒரு ஆட்சியையே மாற்றியவர் எம்ஜிஆர், அவரை போன்றவர்களை இவருடன் ஒப்பிடக்கூடாது ஒப்பிடுவதற்கு ஒரு தார்மீக உரிமையும் இல்லை என பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved