Also Watch
Read this
By: Manigandan Raja

புறநகர் பகுதிகளான தாம்பரம் வண்டலூர் கிளாம்பாக்கம் ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி பெருங்களத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருவது வருகிறது. குறிப்பாக திடீரென மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது மேலும் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.

முழங்கால் அளவுக்கு தேங்கி நின்ற மழை நீரில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் பாதி அளவுக்கு முழுகியது. ஜிஎஸ்டி சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved