Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் எட்டாவது வார்டில் உள்ள வேட்டையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பயன்படாத பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பள்ளி புத்தகம், மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ஷீக்களை அப்புறப்படுத்த இன்று மாலை 10 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வைத்து பள்ளி தலைமை ஆசிரியை சுத்தம் செய்ய சொல்லி உள்ளார்.
மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஏராளமான ஷீக்கள் மாணவர்களை வைத்து குப்பையில் கொட்டி உள்ளனர். மேலும் பழைய புத்தகங்களையும் குப்பையில் கொட்டி எரித்து எரிந்து முடிந்ததும் தண்ணீர் ஊற்றி அனைத்து எரிந்த நிலையில் கிடந்த அந்த குப்பைகளை அள்ளி மாணவர்களை வைத்து அள்ளச் சொல்லி சுமார் 400 மீட்டர் தூரம் சாலை ஓரமாக குப்பைகளை மாணவர்கள் கொட்ட வந்தனர்.
குப்பைகளை கொட்ட வந்த மாணவர்களை செய்தியாளர்கள் வீடியோ எடுக்க தொடங்கியவுடன் ஓடுடா வீடியோ எடுக்குறாங்க என மாணவர்கள் திரும்ப பள்ளிக்கு ஓட்டம் பிடித்தனர். பள்ளிக்கு சென்ற செய்தியாளர்கள் இப்படி அரசு இலவசமாக வழங்கிய பள்ளி புத்தகங்களை தீயிட்டு எரித்து பள்ளி மாணவர்களை வைத்து அப்புறப்படுத்தலாமா என தலைமை ஆசிரியையிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மழையினால் பள்ளியில் வைத்திருந்த புத்தகங்கள் நனைந்து வீணாய் போய்விட்டன அதனால் எரித்தேன் எனவும்,புத்தகங்களை எரிக்கவில்லை அட்டை பெட்டியை தான் எரித்தேன் எனவும் அரசு மாணவர்களுக்காக விலை இல்லாமல் கொடுத்த ஷூக்கள் கால்களில் அணியமுடியவில்லை அதனால் மாணவர்கள் வாங்கவில்லை அதனால் தூக்கி எரிந்தேன் என மழுப்பலான பதில் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved