news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை
tv

Also Watch

டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை

பள்ளிப்பாளையம், நாமக்கல்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுப்பிரியர்கள் புகார்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஜீவா செட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில், குவாட்டர் மற்றும் பீர் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் எம்.ஆர்.பி. விலையை விட ₹5 முதல் ₹10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குடிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

"நாங்கள் நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில்தான் மதுபானம் வாங்க வருகிறோம். அதிலும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் தொகை கேட்டால் எப்படி?" என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மேலும், "கூடுதல் விலை வசூலிக்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தும், சில கடைகளில் அது பின்பற்றப்படவில்லை.

எதற்காக இந்த கூடுதல் வசூல்? யார் அனுமதியுடன் இது நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பினர். இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகமும் அதிகாரிகளும் ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் அருகே எழுந்தருளிய அம்மன்

அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் அருகே எழுந்தருளிய அம்மன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved