news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் விமல் நம்பிக்கை
tv

Also Watch

முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் விமல் நம்பிக்கை

பல்லாவரம், சென்னை

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vimal

சென்னை, பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் அமைந்துள்ள புதிய தனியார் சலூன் மற்றும் அழகியல் மையத்தினை நடிகர் விமல் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தோடு, குத்து விளக்கு ஏற்றி தொழிலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் திவாகர், பிரதாப் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். திறப்பு விழாவில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக
பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், "மீண்டும் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன்" என்று தெரிவித்தார். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் தற்போது
சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது" என்றார்.

மேலும், நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "கில்லி திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தபோதே அவர் எல்லாம் விஷயத்தையும் கூர்மையாகவும் நிதானமாகவும் கவனிப்பவர் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

மக்களின் பிரச்சினைகளையும் அதே அக்கறையுடன் கவனிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறினார். நடிகர் விமலின் இந்தக் கருத்துகள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே கவனம் பெற்றன., அதே நேரத்தில் அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று சொன்னேன் ஆனால் கேட்கிறீர்கள் என சிரிச்சுக்கிட்டே பதில் சொன்னார்.

Related Link
அப்போது கேள்வி இப்போது மவுனம், முதலமைச்சர் மீது சிவசங்கர் விமர்சனம்

அப்போது கேள்வி இப்போது மவுனம், முதலமைச்சர் மீது சிவசங்கர் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved