news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தை பராமரிக்க கோரிக்கை
tv

Also Watch

அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்தை பராமரிக்க கோரிக்கை

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசு மருத்துவமனை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் பிரதான பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது குறுகிய இடத்தில் செயல்பட்டு வந்த இந்த அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்ற நிலையில் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில்.

புதிதான அரசு மருத்துவமனை மற்றொரு இடத்தில் கட்டப்பட்டு அனைத்து சிகிச்சை பிரிவுகள் புதிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது இதனால் பழைய மருத்துவமனையில் சித்த மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி உள்ளிட்ட ஒரு சில சிகிச்சைகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் மாற்ற இதர கட்டடப்பகுதிகள் எவ்வித பயன்பாடு இன்றி இருக்கும் நிலையில் அப்பகுதிகள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும் இதர சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாகவும் மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பழைய மருத்துவமனை கட்டிடம் முழுமையாக தற்போது மீண்டும் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் உடனடியாக அதிகாரிகள் கட்டிடத்தை முறையாக பராமரித்து அரசின் இதர தேவைகளுக்கு முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Link
குடியிருப்பு பகுதியில் உள்ள குட்டையில் தேங்கிய கழிவுநீர்

குடியிருப்பு பகுதியில் உள்ள குட்டையில் தேங்கிய கழிவுநீர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved