Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகாசி மாநகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட முனியசாமி நகர் பகுதியில் மாநகராட்சியிலிருந்து வெளியேறும் கழிவு முழுவதும் குட்டையில் தேங்கி நிரம்பியுள்ளது.
இதனால் முனியசாமி நகர் 1வது மற்றும் 2வது தெரு, நெல்லுகுத்திப்பாறை உள்ளிட்ட பகுதியில் கொசு தொல்லை உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி பல முறை மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால்.

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திருத்தங்கல் - செங்கமலநாச்சியார்புரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் 8வது வார்டு திமுக மாமன்ற துரைப்பாண்டியும் பொதுமக்களுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குட்டையில் தேங்கிய கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுத்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved