Also Watch
Read this
By: Web Team

முன்விரோதம் காரணமாக புதுக்கோட்டையில் இளைஞரை வெட்டிக் கொல்லமுயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய், வீரையன் இருவரும் வாரச்சந்தைகளில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர்.
தொழில் நிமித்தமாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், வீரையன் மீன் வெட்டும் அரிவாளைக் கொண்டு விஜயை கை மற்றும் தலையில் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த விஜய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.