Also Watch
Read this
By: Web Team

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், நவராத்திரி திருவிழா தொடங்கி, ஸ்ரீ சக்கரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
தினமும் காலை ஸ்ரீ சக்கரத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று. இரவு துர்க்கையின் பல்வேறு அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் காட்சி அளிப்பார்.

இந்நிலையில், இன்று ராமநாதசுவாமி கோயிலில், காப்பு கட்டி ஸ்ரீ சக்கரத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதன்பின் ஸ்ரீ சக்கரத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved