Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 08:08 AM
By: Fyrose Banu

கயத்தாறில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா, கடந்த 6 ஆம் தேதி மாலை மிகச் சிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
சிறப்பாக நடந்த கொடியேற்ற நிகழ்வு
திருவிழாவின் தொடக்கமாக ஆலயத்தின் முன்பு உள்ள வெண்கல கொடிமரத்தில் திண்டுக்கல் சேசு சபை இன்னாசியர் ஆன்மீக மையப் பங்குத்தந்தை தனராஜ் மற்றும் கயத்தாறு லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை எரிக் ஜோ ஆகியோர் இணைந்து திருவிழாக் கொடியினை ஏற்றி வைத்தனர்.
வேத மந்திரங்கள் முழங்க தேரோட்டம் துவக்கம்
பத்தாம் நாள் திருவிழாவான இன்று புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை எரிக் ஜோ மற்றும் பாளையங்கோட்டை சேவியர் காலேஜ், பிரின்சிபல் பேனட் ரோபஸ் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
லூர்து அன்னைக்கு நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்
தேர் பவனி திருவிழாவில் தேர் பின்னால் கும்பிடு நேர்த்திக்கடன் செலுத்தி ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் வழிபாடு நடத்தினர். திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று லூர்து அன்னைக்கு உப்பு பொரிகடலை பழங்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை எரிக் ஜோ தலைமையில் தலைவர் சூசை மாணிக்கம் மற்றும் விழா கமிட்டியார்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved