Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.
சின்ன நெற்குன்றம் கிராமத்தில் ஒரு தரப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூவீலரில் அதிக ஒலி எழுப்பியபடி சென்றுள்ளனர். இதை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டதால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதையறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து மோதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : பொங்கல் பண்டிகையில் காவல் நிலையத்தில் நடனம்